ஏரியூர் அருகே உள்ள பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரல் குந்தி பகுதியில் இருந்து சாமத்தால், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய தார் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பயணிக்கவே முடியாத நிலையில் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையை கடக்கும், பள்ளி கல்லூரி வாகனங்களும், மோட்டார் சைக்கிளில் பயணிப்போறும் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும்.