தடுப்புகள் அவசியம்

Update: 2026-10-25 16:09 GMT

ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு ஓசூர் தேர்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பு பகுதியின் பின்புறமாக வழியாக நாள்தோறும் ஏராளமானோர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபுறமும் எந்தவித தடுப்பு சுவரோ அல்லது தடுப்பு கம்பியோ இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. வாகனங்களில் வருபவர்கள் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சாலையில் இருபுறமும் பாதுகாப்பாக தடுப்பு சுவரோ அல்லது கம்பிகளோ அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்