தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2026-10-25 15:32 GMT

ராமநாதபுரம் மாவட்டம், சாலைவலசை கிராமத்தில் வடக்கு தெரு சாலை நீண்ட காலமாக பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் இவ்வழியே கடந்து செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இச்சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்