சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அதன் சுற்றுப்புற கிராம சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றது. இதனால் இச்சாலையை அன்றாடம் பயணிக்கும் தொழிலாளர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளிளும் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.