பல்லடம் - மங்கலம் ரோடு - தபால் அலுவலக ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் செல்லும் பகுதியில் பெரிய குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி ரோட்டோர குழியில் விழுந்து விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ஜூன்தாஸ், பல்லடம்.