காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டை, செல்வ விநாயகர் அவென்யூ பகுதியில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. மேலும் மழைக்காலங்களில் இந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமான காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் தற்போது கற்களை கொட்டி தற்காலிகமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.