செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட வெட்டுவாங்கேணி கற்பகவிநாயகர் நகர், 7-வது பிரதான சாலை, 4-வது குறுக்குத்தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதே இடத்தில் மின்சார பெட்டி ஒன்றும் உள்ளம். தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் உள்ள மின்சார பெட்டியினால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் கடந்துசெல்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.