திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் குப்பைகள் சாலைகளின் ஓரத்திலேயே கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் காற்றில் பரப்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதனால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.