திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பஜார் எப்போதும் பரபரப்பான இடமாகும். இங்கு அதிகப்படியான வாகனங்கள் செல்லும். ஆனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் மாடுகள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சில சமயம் இங்கு விபத்தும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.