சீரமைக்க வேண்டும்

Update: 2026-10-25 09:34 GMT

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட தும்பகோட்டில் இருந்து கால்வாய் கரையோரமாக திருநந்திக்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், சாலையின் தொடக்கப் பகுதியான தும்பகோட்டில் மண்கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக சிவாலய ஓட்டம் நாளில் ஏராளமான பக்தர்களும், ஊர் மக்களும் சாலையை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த சாலை செடிகள் வளர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சாலையை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், தும்பகோடு.

மேலும் செய்திகள்