கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே தோண்டப்பட்டு இருந்த சாலை முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி சீரமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் மீண்டும் அந்த சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்.