வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-10-25 09:30 GMT

நாகர்கோவில் மாநகராட்சி அனந்தன் பாலத்தில் இருந்து தம்பத்து கோணம், குருகுலம் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பள்ளங்கள் தெரியாத வகையில் காண்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்காத வகையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்வின், வடக்கு கண்ணகுறிச்சி.

மேலும் செய்திகள்