அவினாசி சங்கமாங்குளம் வீதி மரக்கடையின் பின்புறம் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலையோரத்தில், மது பிரியர்கள் அமர்ந்து மது குடிப்பதாகவும், பின்னர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், தனியாக அந்த சாலையில் பெண்கள் மறறும் குழந்தைகள் செல்ல அச்சப்படுகிறார்கள் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலையோரத்தை திறந்த வெளிபாராக பயன்படுத்தும் மது பிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞானப்பிரியா, அவினாசி.