மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் சாலை சுருங்கி குறுகலாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி-கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.