மதுரை மாவட்டம் குமாரம் அருகிலுள்ள சரவணா டவுன்ஷிப் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.