கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி பலாஜி நகரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சாலை அமைப்பதற்காக மண் மற்றும் ஜல்லிகள் கொட்டப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி கிடப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.