கரூர் மாவட்டம் சுக்காலியூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முன்னாள் சுங்கச்சாவடியில் இருந்து திரும்பும் குறுகிய சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தில் மணல் கொட்டி தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.