விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மகப்பேறு ஆஸ்பத்திரி முதல் ரெயில் நிலையம் வரை செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரி வரும் பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக கடந்து ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேதமடைந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?