வாசுதேவநல்லூர் கருப்பையாறு பாலத்தில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த பாலத்தின் விரிசல்களில் ஆங்காங்கே ஆல மரக்கன்று, அரச மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. இதனால் பாலம் விரிசல் அதிகரித்து அதன் நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் பாலத்தின் மேலே இருபுறமும் மண்குவியல் உள்ளதால் விபத்து ஏற்படுகிறது. எனவே பாலத்தில் முலைத்த மரக்கன்றுகளையும், மண்குவியலையும் அகற்றுமாறு வேண்டுகிறேன்.