விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதிகளில் உள்ள பெரும்பாலான் முக்கிய சாலைகள் சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் வாகனங்களும் பழுதாகின்றன. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதி சாலைகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?