மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிறுசிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.