அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக மண்சாலையாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுவதுடன், மழைக்காலங்களில் பாதை சேறும், சகதியுமாக மாறுவதால் மேலும் அவதிப்படுகின்றனர். எனவே மயானத்திற்கு செல்லும் பாதையை தார்சாலையாக மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.