கரூர் மாவட்டம் சுக்காலியூரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் குறுக்கு சாலை முடிவில் பெரிய பள்ளம் உள்பட 3 இடங்களில் பள்ளங்களுடன் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்லும்போது தள்ளாடுவதால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.