கோத்தகிரி அருகே சோலூர் மட்டம் பனக்கம்பையில் இருந்து தும்பிமலை கிராமத்துக்கு செல்ல தார்சாலை வசதி இல்லை. அங்கு மண்பாதை மட்டுமே உள்ளது. அதுவும் மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே உடனடியாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.