சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையில் அன்றாடம் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இச்சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?