திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நடுகுத்தகை, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இந்த பகுதி வழியாக குழந்தைகள் மற்றும் வயதானோர் யாரும் செல்லமுடியவில்லை. மேலும், அருகில் வீடுகள் இருப்பதால் தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.