ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு 26-வது வார்டு வண்டியூரான் கோவில் பகுதி, பாபா கோவில் அருகில் மற்றும் 40-வது வார்டு பள்ளிக்கூடம் அருகில் உள்ள சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.