உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரத்துக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் விலகி செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சில வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.