வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிபட்டி பஞ்சாயத்து பகுதியில் மல்லூரில் இருந்து வெண்ணந்தூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, விபத்துகளை தடுக்கும் வகையில் கரட்டுப்பாளையம் கூட்டுறவு சங்கம் அருகே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.