கோவை பாலசுந்தரம் சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் வழியில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் குடிநீர் குழாய் பதிக்க சாலை தோண்டப்பட்டது. அந்த சாலையை முறையாக மூடவில்லை. இதனால் சாலையில் இருந்து பெயர்ந்த ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பாதசாரிகளும் தடுமாறி விழுந்து வருகின்றனர். எனவே அங்கு சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்களை அகற்றவும், சாலையை முறையாக சீரமைக்கவும் அதிகாரிகள் முன்வர வேண்டும்.