விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதத்தை தவிர்க்க மேற்கண்ட பகுதி சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.