சேதமடைந்த தார்சாலை

Update: 2026-09-20 06:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே வண்ணாரப்பட்டியில் இருந்து கணபதிபுரம் மற்றும் தொண்டைமான்ஊரணி செல்லும் விளக்கு சாலைகளுக்கு இடையே ஒசுவப்பட்டி வழியாக செல்லும் 2 கிலோமீட்டர் தார்சாலை கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக பழுதடைந்துள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இச்சாலை படுமோசமாக சேதமடைந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி