குண்டும் குழியுமான சாலை

Update: 2026-09-20 05:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள கோல்டி சாலை, எப்போதும் வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலை. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்து சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி