சேதமடைந்த சாலை

Update: 2026-09-19 21:59 GMT

தலைகுளத்தில் இருந்து திங்கள்நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் பல பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோஸ்அஜின், மானாவிளை.

மேலும் செய்திகள்

சாலை வசதி