புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருவதில் தினசரி தடங்கல்கள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.