அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை அகலப்படுத்தும் பணியில், வி.கைகாட்டியில் இருந்து அஸ்தினாபுரம் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டு, அரியலூர் வரையிலான பணிகள் தொடங்கப்படாமல் அரைகுறையாக நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் தினமும் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில், எஞ்சியுள்ள நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.