நாமகிரிப்பேட்டையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, சீராப்பள்ளி, காட்டுர், மூலபள்ளிப்பட்டி, மெட்டாலா, ஆயில்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்தும் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பஸ் இறக்கத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல மண்பாதை என்பதாலும், மேடுபள்ளம் இருப்பதாலும் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி தார்சாலை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?