கரூர் மாவட்டம் நொய்யல் - வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சேமங்கி பகுதியில் இருந்து புகழூர் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றுக்குச் செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்தில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பழுதடைந்துள்ள அந்த மண் சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.