கோவை சின்னியம்பாளையம் அடுத்த ஆர்.ஜி.புதூரில் தனியார் பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் மீது சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.