திருவள்ளூர் மாவட்டம், கும்மனூர் கிராமத்தில் இருந்து பூதூர் கிராமம் வரும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். இரவு நேரங்களில் இதனால்விபத்துஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.