சேதமடைந்த சாலை

Update: 2026-08-23 06:39 GMT

 அந்தியூர் வெள்ளையம்பாளையத்தில் இருந்து 4 கி.மீ. தூரம் கொண்ட பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்றன. இதனால் இந்த வழியாக தினமும் செல்லும் ஏராளமான பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர். அனைவரின் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்