சென்னை கொளத்தூர் பேப்பர் மில் சாலை மிகவும் பரபரப்பான சாலை. இந்த பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள், சாலையில் ஆபத்தான முறையில் நடந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.