தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-08-23 10:11 GMT

சரவணம்பட்டி வி.ஐ.பி. சென்ட்ரல் பகுதியில் சாலை வசதி எதுவும் இல்லை. மண்சாலை மட்டுமே அங்கு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை மேலும் மோசம் அடைகிறது. மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தார்சாலை அமைப்பதோடு பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்