தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் , சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், ஒரத்தநாடு