சிவகங்கை மாவட்டம் ராஜகம்பீரம் தாலுகா 8-வார்டு காளியம்மன்கோவில் தெருவில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதானால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதால் அவசரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமா?