சேலம் 3 ரோட்டில் இருந்து தனியார் மருத்துவமனை செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக சமன் செய்யப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சமன் செய்வதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்.