வடக்கு தாமரைகுளத்தில் அங்கன்வாடி மையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 100 வீடுகள் உள்ளனர். இந்த ஊருக்கு செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், சாலையின் இருபுறமும் ஒரு புறம் ஓடையும், மறுபுறம் பள்ளம் உள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் விபத்து தடுப்புச்சுவர் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டடிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், சாலையின் இருபுறமும் விபத்து தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹாக்ஸன்,வடக்கு தாமரைகுளம்.