விரிசல் விழுந்த சுரங்கப்பாதை சுவர்

Update: 2026-08-02 13:50 GMT

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் வழியாக தர்மபுரி, தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்தநிலையில் ரெயில் சுரங்கப்பாதை சுற்றுச்சுவர் சேதமாகி விரிசல் விழுந்து காணப்படுகிறது. இதனால் இது எந்த நேரத்திலும் இடிந்து விழுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமான பக்கவாட்டு சுவர்களை அகற்றி புதிய பக்கவாட்டு சுவர்கள் கட்ட வேண்டும்.


மேலும் செய்திகள்