ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.