அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் கிராமம் காலனித் தெருவில் மங்குலி பிள்ளையார் கோவிலில் இருந்து அரங்கோட்டை செல்லும் பாதை வரை சாலை அமைப்பதற்காக 3 மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்ட ஜல்லிகள் மீது தார் ஊற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இந்தச் சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.